வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை வாகனேரி பிரதான வீதியின் பால்பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று 01 இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சந்தைக்கு உறவினர் செல்வதற்காக திருமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு உறவினரை விட்டுவிட்டு மீண்டும் வாகனேரியை நோக்கி சென்றுகொண்டிருக்கையில் வாகனேரியிலிருந்து கிறவல் ஏற்றி வந்திருந்த லொறி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இளைஞன் மீது மோதியுள்ளது. மோதப்பட்ட இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாரதியை கைது செய்யப்பட்டு, லொறி பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









