Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குரார்ப்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர்.

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டமானது வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மிதந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்
உலக செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மிதந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்

October 30, 2026
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்!
செய்திகள்

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்!

October 30, 2026
இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது
செய்திகள்

இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது

October 30, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

October 30, 2026
சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

October 30, 2026
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 30, 2026
Next Post
வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு: ஏப்ரலுக்கு முன் சில பகுதிகள் மக்களிடம்

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு: ஏப்ரலுக்கு முன் சில பகுதிகள் மக்களிடம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு