Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானம்

நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானம்

6 months ago
in செய்திகள்

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத் திட்டத்தின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாக உள்ளதுடன், நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த அறிக்கைகள் உள்ளிட்ட நோய்த்தடுப்புத் தொடர்பான எந்தவொரு தரவுகளையும் மேலிடத்திற்கு வழங்காமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் அச்சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.

வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் திங்கட்கிழமை (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, வைத்தியர்களுக்கென ‘இலங்கை மருத்துவ சேவை’ எனும் விசேட சேவையை உருவாக்குதல், போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் இடமாற்றக் கொடுப்பனவு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதாக அமைச்சு உறுதியளித்திருந்தது. எனினும், அந்த உறுதிப்பாடுகளை மீறி சுகாதார அமைச்சு காலம் தாழ்த்தி வருவதால், நாம் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே பிரதான 6 பணிகளுடன் விலகியிருக்கு தொழிற்சங்க நடவடிகடகைகளை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (18) முதல் 7வது கட்டமாகச் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கையும் ஆரம்பமாகவுள்ளது. இந்நாட்டின் சுகாதாரக் தரவுகளை சீராகப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிகள், இனிவரும் நாட்களில் நோய்த்தடுப்புத் தொடர்பான எந்தவொரு தரவுகளையும் மேலிடத்திற்குச் சமர்ப்பிக்க மாட்டார்கள்.

குறிப்பாக, நாளாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தடுப்பூசிப் பராமரிப்பு மற்றும் டெங்கு தொடர்பான தரவுகள், வாராந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தொற்றுநோய்கள் தொடர்பான அறிக்கைகள் , மாதாந்தம் மற்றும் காலாண்டு ரீதியாகச் சமர்ப்பிக்கப்படும் போசாக்கு மற்றும் சுகாதாரப் புள்ளிவிவர அறிக்கைகள் எதனையும் வழங்கப் போவதில்லை. இதனால் நாட்டின் சுகாதார நிலைமையை மதிப்பிட முடியாத சூழல் ஏற்படும்.

அரசாங்கம் வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தலைக்கணத்துடன் பதிலளிப்பதைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் படிப்படியாகத் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும். தற்போதைய சேவை வீழ்ச்சிக்கும், இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கும் சுகாதார அமைச்சும் அரசாங்கமுமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். எமது கோரிக்கைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுமாயின், இப்போராட்டத்தை மேலும் தீவிரமான கட்டத்திற்குக் கொண்டு செல்ல நாம் தயங்க மாட்டோம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்
செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்

August 6, 2026
கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
செய்திகள்

கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 6, 2026
இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!

August 6, 2026
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு
செய்திகள்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

August 6, 2026
பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 6, 2026
Next Post
தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.