Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்ல- சரத் பொன்சேகாவே அதற்கு ஆதாரம்; நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்ல- சரத் பொன்சேகாவே அதற்கு ஆதாரம்; நாமல் ராஜபக்ஷ

5 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் புதியவை அல்ல எனவும், ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்லர் என்பதை அவரே இப்போது நிரூபித்துள்ளார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

முன்னதாக நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது குறித்து ராஜபக்ஷ குடும்பத்தினர் பேச்சு நடத்தினார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

“விடுதலைப்புலிகள் மூன்றாம் தரப்பிடம் சரணடைய விரும்பினர், ஆனால் ராஜபக்ஷக்கள் அவர்கள் இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என வலியுறுத்தினர். அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டன. அவர்கள் சரணடைந்திருந்தால் பிரபாகரன் இன்று வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார்.” என்றும் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

பொன்சேகாவின் இந்த கூற்றுத் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. பின்வருமாறு தெரிவித்தார்.

“விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, பொன்சேகா கூறுவது ஒன்றும் புதிய தகவல் அல்ல.

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்யச் சொன்னார் என்று முன்னர் கூறிய பொன்சேகா, இப்போது அதற்கு முரணான கருத்தை வெளியிடுகின்றார்.

எது எப்படியிருந்தாலும், ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்ல என்பதையும், அவர்கள் போரை அமைதியான முறையில் முடிக்கவே முயற்சித்தனர் என்பதையும் உறுதிப்படுத்தியமைக்காக பொன்சேகாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் போரை முடிக்கவே மஹிந்த ராஜபக்ஷ விரும்பினார். தமிழ் மக்களுக்கு எதிராக ஒருபோதும் போர் தொடுக்கப்படவில்லை.” – என்று நாமல் எம்.பி. தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
அமரர்.செல்லப்பா புவனேந்திரராஜா

அமரர்.செல்லப்பா புவனேந்திரராஜா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.