Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு கிழக்காக இன்று உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி

இலங்கைக்கு கிழக்காக இன்று உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகுகின்றது. இது நாளை மறுநாள் தாழமுக்கமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,

இதனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை இன்றும், நாளையும், நாளை மறுநாளும் பரவலாக கனமழை முதல் மிகக் கனமழையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களிலும் அவ்வப்போது கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே கிழக்கு மாகாணங்களின் குறிப்பாக ஆற்றங்கரையோரங்கள், குளங்களின் வான் பாயும் பகுதிகள், தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பாக இந்த மூன்று நாட்களிலும் மிக அவதானமாக இருப்பது மிக அவசியம்.

வடக்கு மாகாணத்திலும் இன்று முதல் மழை பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக பெருநிலப்பரப்பில் சில இடங்களில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று (20) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மத்திய, ஊவா, தென், சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே ஊவா, மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களின் உறவுகள் கனமழையோடு கூடிய நிலச்சரிவு அனர்த்தங்கள் தொடர்பாக விழிப்பாக இருப்பது சிறந்தது.

அதேவேளை முன்னர் கூறியவாறு இன்று முதல் எதிர்வரும் 22.02.2026 வரை நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று முதல் இலங்கையின் கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

பொதுவாக வடகீழ்ப் பருவகால வானிலைத் தோற்றப்பாடுகள், ஜனவரி மாதத்தின் இறுதிபபகுதியில் இருந்தே பின்வாங்க தொடங்கி பெப்ரவரி முற்பகுதியில் முழுவதுமாக விலகுவதே வழமை. ஆனால் இம்முறை மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக எங்கள் காலநிலைப் பருவத்திற்கும், நெற்செய்கைப் பருவத்திற்குமிடையில் எந்தவிதமான ஒத்திசைவும் காணப்படவில்லை. இம்முறை அந்த நிலைமை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நெற்செய்கையில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.

ஆகவே துறை சார்ந்த விற்பன்னர்கள் இது தொடர்பாக அவதானம் செலுத்தி மாற்று வழிமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என அறிவுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து!

July 21, 2026
கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!
செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

July 21, 2026
தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
Next Post
இந்திய தெலுங்கானாவில் மட்டு ஊடகவியலாளர்கள்

இந்திய தெலுங்கானாவில் மட்டு ஊடகவியலாளர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.