சிலி,சாண்டியாகோ, ரென்கா பகுதியிலுள்ள வீதியில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.








