Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

5 months ago
in செய்திகள்

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 33, 35 மற்றும் 36 வயதுடைய திப்பத்துகொட, ஹொரணை, மொரகஹஹேன மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களை பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்கித் தவசம் வைத்திருந்த ஒருவரும் இந்த நால்வரில் அடங்குகிறார்.

கொள்ளைச் சம்பவங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட துருப்பிடிக்காத உருக்கினால் செய்யப்பட்ட மன்னா கத்தி மற்றும் திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில் ஒரு மோட்டார் சைக்கிள் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் புலத்சிங்கள பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏனைய சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரவு நேர சோதனை பணியின் போது ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தொடர் குற்றச் செயல்கள் அம்பலமாகியுள்ளன.

ஹொரணை நவம் மகா பெரஹெர தினத்தில், இவர்கள் ஹிக்கடுவ பகுதியில் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி மோட்டார் சைக்கிளைத் திருடியுள்ளனர்.

பின்னர் அந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடுகளை மாற்றி கஹதுடுவ, கும்புக, கோனபொல மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கைபேசிகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (23) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹொரணை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

July 9, 2026
இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!
செய்திகள்

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!

July 9, 2026
“சிங்கள மக்கள் வடக்கில் காணி பிடிப்பதில்லை”-அர்ச்சுனா
அரசியல்

“சிங்கள மக்கள் வடக்கில் காணி பிடிப்பதில்லை”-அர்ச்சுனா

July 9, 2026
“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!
செய்திகள்

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

July 9, 2026
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

July 9, 2026
யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!
செய்திகள்

யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

July 9, 2026
Next Post
நாமலின் உரைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தடை

நாமலின் உரைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.