Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் சட்டத்தின் ஆட்சி தற்போது பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

குறிப்பாக, அண்மையில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெலிக்கடை, மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் சிறைச்சாலை நிர்வாகத்தில் காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் கைதிகள் நெருக்கடி, செல்வாக்கு மிக்க கைதிகளின் ஆதிக்கம் மற்றும் ஊழல் போன்ற விடயங்கள் உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சில சிறைச்சாலைகளில் முஸ்லிம் கைதிகளுக்கான தொழுகை அறைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மஹர சிறைச்சாலையில் இருந்த பள்ளிவாசல் அகற்றப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், அந்த மத வழிபாட்டு வசதிகள் மீள வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், சிறைச்சாலை அமைப்பு மற்றும் குற்றவியல் நீதி முறைமை முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக புனர்வாழ்வு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!
செய்திகள்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!

November 22, 2026
உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!
செய்திகள்

உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!

November 22, 2026
பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு
அரசியல்

பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு

November 22, 2026
லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!

November 22, 2026
யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல்: 21 பேர் விளக்கமறியலில் – உள்ளக விசாரணையும் ஆரம்பம்!
செய்திகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல்: 21 பேர் விளக்கமறியலில் – உள்ளக விசாரணையும் ஆரம்பம்!

November 22, 2026
சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!

November 22, 2026
Next Post
“சிங்கள மக்கள் வடக்கில் காணி பிடிப்பதில்லை”-அர்ச்சுனா

"சிங்கள மக்கள் வடக்கில் காணி பிடிப்பதில்லை"-அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு