Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை; லண்டன் தொழிலதிபர் நிதியுதவியுடன்

மட்டக்களப்பில் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை; லண்டன் தொழிலதிபர் நிதியுதவியுடன்

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சை வழங்கும் செயற்திட்டம் (19.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

லண்டனில் வசிக்கும் கோவில் போரதீவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்க்கண்டு நேசராசா மற்றும் அவரது குடும்பத்தினரின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நண்பர்கள் வட்டம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் (Lions Club) ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இன்றைய தினம் (19.02.2026) விசேட கண் மருத்துவ நிபுணர்களால் தெரிவு செய்யப்பட்ட 30 நோயாளர்களுக்கு அதிநவீன முறையில் கண்புரை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டிலும் மார்க்கண்டு நேசராசா குடும்பத்தினரின் நிதியுதவியுடன் 200-க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மக்களின் அத்தியாவசியத் தேவையறிந்து தொடர்ச்சியாக இவ்வாறான சேவைகளை வழங்கி வரும் நேசராசா குடும்பத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த உன்னதமான சேவையினைப் பாராட்டி, மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் வட்டம், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் சிகிச்சையினால் பயனடைந்த பொதுமக்கள் அனைவரும் மார்க்கண்டு நேசராசா குடும்பத்தினருக்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
Next Post
பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!

பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு