Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதுளை தமிழ் மொழிப் பாடசாலைககளின் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றம்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

பதுளை தமிழ் மொழிப் பாடசாலைககளின் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றம்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதுளை மாவட்டத்தின் தமிழ் மொழிப் பாடசாலைகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கல்வி முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த முன்னேற்றம் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் “ஒரு புதிய வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை நோக்கி செல்வதாக குறிக்கிறது”.

இந்த வளர்ச்சியில் பண்டாரவளை மத்திய கல்லூரி, பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலை, விவேகானந்தா, ராமகிருஷ்ணா மற்றும் பசறை தேசிய பாடசாலை போன்ற பல பாடசாலைகள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

திறமையான ஆசிரியர்கள், முறையான கற்பித்தல் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை இணைந்து இந்த முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளன.

எனினும், அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் திடீர் ஆசிரியர் இடமாற்றங்கள் இந்த கல்வி வளர்ச்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் பொருளியல் போன்ற பிரதான பாடங்களை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவது மாணவர்களின் கல்வி தொடர்ச்சியை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இப்பாடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கடுமையாகக் குறைந்திருந்த சூழல் நிலவியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அந்தப் பற்றாக்குறை ஓரளவு சரிசெய்யப்பட்டு, பாடசாலைகளில் கற்பித்தல் முறையாக நடைபெற ஆரம்பித்தது. இந்நிலையில் அனுபவமிக்க ஆசிரியர்களை திடீரென மாற்றுவது மீண்டும் பழைய பின்தங்கிய நிலையை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.

மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராகுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இந்த தருணங்களில், மாணவர்களின் முயற்சியும் சமூகத்தின் ஆதரவும் ஒரே நேரத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.” இந்த சந்தர்ப்பத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படுவது கல்வி நெறிமுறைக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், ஒரு ஆசிரியர் மாற்றப்படும் போது உடனடியாக தகுதியான மற்றொருவர் நியமிக்கப்படாதது பாடத்திட்ட முன்னேற்றத்தை முற்றிலும் தடை செய்கிறது.

தற்போது மாவட்டத்தில் 203 தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 35 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் உள்ளன.

இம்மாணவர்களின் எதிர்காலம் கல்வி தரத்துடன் நேரடியாக இணைந்துள்ளது. ஆகையால், கல்வி அதிகாரிகள் முறையான திட்டமிடல் மற்றும் தேவையறிதல் இன்றி ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

கல்வி என்பது ஒரு மாவட்டத்தின் சமூக – பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளம். அந்த அடித்தளத்தை பலவீனப்படுத்தும் எந்த முடிவும் எதிர்கால தலைமுறையின் வாய்ப்புகளை சுருக்கும்.

எனவே, பதுளை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்காக ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் மறுபரிசீலனை அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
Next Post
மட்டு முனைக்காட்டில் யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி

மட்டு முனைக்காட்டில் யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.