Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின் நிலையத்தில் மர்ம திருட்டு; நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது

மின் நிலையத்தில் மர்ம திருட்டு; நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது

7 months ago
in செய்திகள்

நீண்டகாலமாகச் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த மின் நிலையத்தில் நீண்டகாலமாகத் திருட்டு இடம்பெற்று வருவதாக அதன் உரிமையாளர் அண்மையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமையச் செயற்பட்ட பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறையிலிருந்து தடயவியல் பொலிஸாரை சனிக்கிழமை (28) அன்று சம்பவ இடத்திற்கு அழைத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, குறித்த மின் நிலையத்தின் காவலாளி உட்பட மற்றொரு சந்தேக நபரையும் நிந்தவூர் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்களைச் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தன்னிடம் இருந்த வாயுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மின் நிலையத்தில் உள்ள புறாக்களை வேட்டையாட வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். எனினும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட வாயுத் துப்பாக்கி குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மட்டு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நில அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

மட்டு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நில அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு