Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படும் செய்திக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய இராணுவத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அயதுல்லா அலி கமேனி மற்றும் ஈரானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செயலானது, சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும்.

இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு எனச் சுட்டிக்காட்டிய அவர், இதற்காக ஈரான் நாட்டு மக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையை ஹக்கீம் விமர்சித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால இருதரப்பு உறவுகள் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் அறிக்கையில் ஈரானின் பெயர் குறிப்பிடப்படவில்லை அல்லது அந்த நாடு சந்தித்த இழப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்காமல், பதற்றத்தைத் தணிக்கும் பொறுப்பை ஈரான் மீது மட்டும் சுமத்துவது போல் அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் இலங்கை தனது ‘அணிசேரா கொள்கை’ மற்றும் ‘நடுநிலைத் தன்மையில்’ இருந்து விலகிச் செல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

அத்துடன் ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஹக்கீம், இந்த மோதல் தொடர்ந்தால் அது உலகளாவிய ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு நீண்டகாலப் போராக மாறும் என எச்சரித்துள்ளார்.

மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்திய அவர், அனைத்து தரப்பினரும் இராஜதந்திர ரீதியாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்; ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்; ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு