ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் புதிய தவிசாளராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைமைத்துவக் கட்டமைப்பில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.







