Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டனில் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்; மூவரை கைது செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

ஹட்டனில் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்; மூவரை கைது செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டுவா” போன்ற கோஷங்களையெழுப்பியும் பதாதைகளையும் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அவ்வேளையில், ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்துக்கு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உட்பட ஏனைய வைத்தியர்களும் வருகை தந்ததுடன் வைத்திய அதிகாரி பஷ்லி சம்பவம் குறித்து குறிப்பிடுகையில், “உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலமொன்று கடந்த 25ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த சடலம் முதல் நாள் பிரேத அறையில் இருந்த நிலையினை விட மறு நாள் வேறு ஒரு நிலையில் காணப்பட வில்லை. ஆனால் இது தொடர்பாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவினை நாங்கள் பரிசோதித்து பார்த்தோம். அப்போது அந்த சிற்றூழியர்கள் மூவரும் பிரேத அறைக்கு சென்றுவந்த காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்” என்றார்.

குறித்த மூன்று சந்தேகநபர்களையும் இன்று மாலை 4 மணிக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
நோர்வே துணை வெளியுறவுத் துறை அமைச்சருடன் தமிழரசுக் கட்சியினர் சந்திப்பு!

நோர்வே துணை வெளியுறவுத் துறை அமைச்சருடன் தமிழரசுக் கட்சியினர் சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு