Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஈரான் அமெரிக்காவிற்கு இரகசியத் தூது?

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஈரான் அமெரிக்காவிற்கு இரகசியத் தூது?

8 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் உளவுத்துறை அமைச்சை சேர்ந்த அதிகாரிகள், ஒரு மூன்றாவது நாட்டின் வழியாக அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகததுக்கு (CIA) செய்தி அனுப்பியுள்ளனர்.

அதில், போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே முறையான அல்லது தீவிரமான உரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரியவருகிறது.

ஈரானின் இந்த சமிக்ஞைகளை அமெரிக்க அதிகாரிகள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இது குறித்துக் கூறுகையில், “நாங்கள் இப்போதே எமது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் அணுசக்தி இலக்குகளை அழிக்கும் கூட்டு நடவடிக்கை தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதாக பென்டகன் தரப்பு கூறுகிறது.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அளித்த ஒரு பேட்டியில், “ஈரான் தலைவர்கள் பேச விரும்புகிறார்கள், நானும் பேசச் சம்மதித்துள்ளேன்” என்று கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் பேச விரும்புகிறது, ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, போரை நிறுத்த தாம் தூதுவிட்டதாக கூறப்படும் தகவல்களை ஈரான் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி கூறுகையில், “நாங்கள் இப்போது எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம். அமெரிக்காவுக்கு எவ்வித செய்தியையும் நாங்கள் அனுப்பவில்லை” எனத் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
செய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
செய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

November 2, 2026
டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!
செய்திகள்

டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!

November 2, 2026
Next Post
போலி உறுதிப்பத்திர வழக்கு; பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை

போலி உறுதிப்பத்திர வழக்கு; பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு