Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது

10 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லனோய மற்றும் கெத்சிறிகம கிராமங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனைகளின் போது 41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பகுதிகளில் ஒரு குழு சிறிது காலமாக சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்து வருவதாகவும்இ இது இந்த கிராமங்களில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கிராமங்களில் உள்ள இளைஞர்களும் இந்த சட்டவிரோத மதுபானத்தை உட்கொள்ள தூண்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் சட்டவிரோத மதுபானமும் சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில்,அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சந்திரசேகர சமரசிங்க, அம்பாறை பிரிவு ஊழல் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டது – இனிமேல் ஈரான் மத்திய கிழக்கின் தோல்வியுற்ற நாடு; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டது – இனிமேல் ஈரான் மத்திய கிழக்கின் தோல்வியுற்ற நாடு; ட்ரம்ப் அறிவிப்பு

March 7, 2026
திருமதி. கமல பூசணி வாமதேவன்
இரங்கல்

திருமதி. கமல பூசணி வாமதேவன்

March 7, 2026
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!
செய்திகள்

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!

March 7, 2026
ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு
உலக செய்திகள்

ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

March 7, 2026
ஆயுர்வேத மருத்துவ சபை பெயரை பயன்படுத்தி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ஆயுர்வேத மருத்துவ சபை பெயரை பயன்படுத்தி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

March 7, 2026
‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’; ஈரானில் 3000 இலக்குகள் மீது தாக்குதல் – அமெரிக்க இராணுவம்
உலக செய்திகள்

‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’; ஈரானில் 3000 இலக்குகள் மீது தாக்குதல் – அமெரிக்க இராணுவம்

March 7, 2026
Next Post
திருமதி. கமல பூசணி வாமதேவன்

திருமதி. கமல பூசணி வாமதேவன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு