Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் ஆறாவது நாள் நிறைவு; இதுவரை ஆறு உடற்பாகங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் ஆறாவது நாள் நிறைவு; இதுவரை ஆறு உடற்பாகங்கள் மீட்பு!

3 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தது.

குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் ஆறாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்றிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று (12) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா,

இன்றையதினம் ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் துப்பாக்கி சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வு பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னி பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்து நாளைய தினமும் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணையே தேவை; மைத்திரி அதிரடி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணையே தேவை; மைத்திரி அதிரடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு