Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு-“இதைப்பற்றி சிந்திப்போர் முட்டாள்கள் என்கிறார் டிரம்ப்”

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு-“இதைப்பற்றி சிந்திப்போர் முட்டாள்கள் என்கிறார் டிரம்ப்”

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது.

இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியது.

அதற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம் அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஈரானின் அணு மிரட்டலை முழுமையாக அழிக்கும் வரை எண்ணெய் விலை குறுகிய காலம் உயர்ந்தாலும் அது மிகச் சிறிய விலை தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூகவலைத்தளமாக ட்ரூத் சோசியலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அவர் “”ஈரான் அணுசக்தி அச்சுறுத்தல் அழிந்து போகும்போது, குறுகிய கால எண்ணெய் விலை அதிகரிப்பு விரைவாகக் குறையும். அமெரிக்கா மற்றும் உலக பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு இது மிகச் சிறிய விலை. முட்டாள்கள் மட்டுமே வேறுவிதமாக நினைப்பார்கள்! – ஜனாதிபதி DJT”” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் மத்தியில் எண்ணெய் விலை நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில் ட்ரம்பின் இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை
அரசியல்

கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை

July 22, 2026
“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
Next Post
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்; 422 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்; 422 பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு