அமெரிக்கா தனது போர்க்கப்பலான டெனாவைத் தாக்கி மூழ்கடித்ததில் கொல்லப்பட்ட டசின் கணக்கான மாலுமிகளின் உடல்கள் விரைவில் இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
104 உடல்களில் 84 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் ஈரான் இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சின் முயற்சிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் திருப்பி அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வொஷிங்டன் இலங்கையை அழுத்துவதாக ஊடக அறிக்கைகள் முன்னர் தெரிவித்த நிலையில் ஈரானின் இந்த புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.








