Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் எலிக்காய்ச்சல் எச்சரிக்கை; 300 பேர் மரணம்

நாட்டில் எலிக்காய்ச்சல் எச்சரிக்கை; 300 பேர் மரணம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் எலிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னதாக 2025ஆம் ஆண்டில் இந்த நோயால் சுமார் 200 மரணங்கள் பதிவாகியிருந்தன.

கடும் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவப்படைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் எனவும், சிக்கல்களை தவிர்க்க உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

நோய்த்தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண்ணுடன் மக்கள் தொடர்பு கொள்ளும்போது, தோலில் உள்ள காயங்கள் அல்லது சளிச்சவ்வு வழியாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைகின்றன என்று வைத்தியர் தாபரேரா விளக்கியுள்ளார்.

இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மொனராகலை மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிக அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மட்டக்களப்பில் தித்வா புயலினால் படகை இழந்தோருக்கு படகு வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் தித்வா புயலினால் படகை இழந்தோருக்கு படகு வழங்கும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு