Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்க்க கோரிக்கை

நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்க்க கோரிக்கை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தொடரின் 9வது சபை அமர்வு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நாவிதன்வெளி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கு. புவனரூபன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் பா. சதீஸ்கரன் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அமர்வின் போது உரையாற்றிய தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் விகிதாசார அடிப்படையில் பங்கீடு செய்து வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் தாம் இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிரானவர் என்றும், மக்களின் நலனே தமக்கான பிரதான குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் போது நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்க்க வேண்டுமெனும் பிரேரணையும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

அந்தப் பிரேரணையில், நாவிதன்வெளி பிரதேசம் கல்வி, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக காணப்படும் சவாலான பிரதேசமாக இருப்பதாகவும், இப்பகுதியில் அமைந்துள்ள பல பாடசாலைகள் முன்னர் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

அவ்வாறே, அவை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதியில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் வெளியூரிலிருந்து தினசரி பயணம் செய்து வந்து கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

போக்குவரத்து சிரமங்கள், தூர இடைவெளி மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை காரணமாக கல்வி நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன் சில பாடங்கள் முறையாக கற்பிக்கப்படாமல் உள்ளதாகவும், மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் அபாய நிலையும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே மேற்கண்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்த்து, தேவையான ஆசிரியர் நியமனங்கள் மற்றும் தொடர்புடைய சலுகைகளை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கும் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

மேலும் இப்பிரேரணைக்கு விரைவான மற்றும் சாதகமான நடவடிக்கை எடுத்து, நாவிதன்வெளி பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த சபை இந்த பிரேரணையை முன்னிறுத்தி ஆளுநர், உரிய அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்றவற்றில் கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
ஏப்ரல் இறுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்; 4 கப்பல்கள் நாட்டிற்கு வருகை

ஏப்ரல் இறுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்; 4 கப்பல்கள் நாட்டிற்கு வருகை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.