Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் சிறுத்தைகள் தென்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

ஹந்தானை பிராந்தியத்தில் அமைந்துள்ள கால்நடை போதனா பண்ணை மற்றும் பணியாளர் மேம்பாட்டு மையம் ஆகியவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் இந்தச் சிறுத்தைகள் அடிக்கடி நடமாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கால்நடை மருத்துவ பீடத்தின் பண்ணை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைத் தலைவர் தம்மிக்க பெரேரா, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவியுடன் இப்பகுதியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதன்படி, குட்டியுடன் கூடிய ஒரு பெண் சிறுத்தை உட்பட சுமார் எட்டு சிறுத்தைகள் இந்தப் பகுதியில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக குட்டிகளுடன் இருக்கும் பெண் சிறுத்தைகள் உணவைத் தேடி மனிதக் குடியிருப்புகளுக்கு அருகில் நகர்வதே பல்கலைக்கழக வளாகத்தில் இவை தென்படக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக பண்ணையிலுள்ள விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிறுத்தைகள் பண்ணையை நெருங்கும் போது ஊழியர்களை எச்சரிக்கக் கூடிய வகையில், அசைவுகளை உணரும் சென்சார்கள் மற்றும் அபாய ஒலி எழுப்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.

உடபேராதனை பகுதியில் அண்மையில் பசு ஒன்றும் நாய் ஒன்றும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட போதிலும், தற்போது நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக சமூகம் அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடப்பதைத் தவிர்க்குமாறும், சிறுத்தைகள் நடமாட்டம் குறித்துத் தெரிந்தால் உடனடியாக பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
Next Post
ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு