Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும்
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை தாக்கி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியையும்
மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின்
இதயமாக கருதப்படும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை எண்ணெய் கப்பல்கள் கடக்க
முடியாத நிலை உருவாகியுள்ளது. .

இருப்பினும் அந்த ஜலசந்தி வழியாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 டன் (சுமார் 10
லட்சம் பேரல்) கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று தடைகளை கடந்து இந்தியா
வந்துள்ளது. அதாவது போர் பதற்றத்துக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய்
கப்பல் வந்து சேர்ந்துள்ளது.லைபீரியா நாட்டு கொடியுடன் “ஷென்லாங் சூயல்மாக்ஸ்”
என்ற பிரம்மாண்ட கப்பல், சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி
முனையமான ராஸ் தனுராவிலிருந்து கடந்த 1-ந்தேதி தனது பயணத்தை தொடங்கியது.
அனைத்து தடைகளையும் கடந்து நேற்று முன்தினம் இரவு மும்பை துறைமுகத்திற்கு
பாதுகாப்பாக வந்து சேர்ந்தது.

இந்த கப்பல் பயணத்தை ஒரு இந்தியரான கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில்
29 பேர் கொண்ட சர்வதேச குழுவினர் மேற்கொண்டனர். ஈரான் படைகளின் தாக்குதல்
அல்லது கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, கடந்த 8-ந்தேதி ஜலசந்தியை கடக்கும்போது
கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (ஏ.ஐ.எஸ்.) தற்காலிகமாக அணைக்கப்பட்டது.
கப்பல் எங்கே இருக்கிறது என்பதை காட்டும் சிக்னல்களை நிறுத்திவிட்டு, ‘டார்க் மோட்’
முறையில் மிகவும் ரகசியமாக இந்த பகுதியை கடந்து, 9-ந்தேதி மீண்டும் சிக்னல்களை
இயக்கியது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் நாட்டு மந்திரியுடன்
நடத்திய பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் ஜலசந்தியை இந்தியாவுக்காக திறக்க ஈரான்
அனுமதி அளித்துள்ளது. கப்பல் பாதுகாப் பாக ஜலசந்தியை கடக்க இதுவும் காரணமாக
கருதப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு