Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

7 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா,இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதோடு, எண்ணெய் கப்பல் போக்குவரத்து இடம்பெறும் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையையும் மூடியுள்ளது.

இதனால் மசகு எண்ணெய், எரிவாயு விநியோகம் உள்ளிட்டவற்றில் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தை தடுக்கக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மேலும் குறித்த நீரிணை வழியான கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிப்பதோடு, பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க அனுப்ப வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்தை மேற்கொள்ள எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,

“ஹோர்முஸ் நீரிணையை நாங்கள் மூடவில்லை. அது திறந்தே இருக்கிறது. எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் அவரது நட்பு நாடுகளுக்கு மட்டுமே இப் பாதை மூடப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக கடந்து செல்லலாம்.

பாதுகாப்பின் காரணமாக பல கப்பல்கள் இப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர். இதற்கும் எங்களுக்கும் எதுவித சம்மந்ததும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்
உலக செய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

March 15, 2026
வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

March 15, 2026
கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை
செய்திகள்

கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை

March 15, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு
அரசியல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

March 15, 2026
புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது
செய்திகள்

புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது

March 15, 2026
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி
உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

March 15, 2026
Next Post
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு