சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.
ஈரானிலுள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலில் உள்ள தளம் ஒன்று தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 108 அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வானது நேற்று நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் 5விகித அதிகரிப்பாகும்.
சர்வதேச நேரப்படி இன்று மதியம் 13.00 மணியளவில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 108.60 அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது.
எண்ணெய் விலையைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் எரிவாயு விலையும் கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது








