Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த நிலையில் திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து மட்டு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்ட முகத்துவாரம் நாவலடி பகுதியைச் சோந்த 37 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு முகத்துவாரம் நாவலடியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் வெளிநாடு அனுப்புவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நிலையில் அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் 3 வருடங்களாக தலைமறைவாகி வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக 9 திறந்த நீதிமன்ற பிடியாணையும் 4 பிடியாணையுமாக 13 பிடியாணை பிறப்பிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய நீதிமன்ற பிடிவிறாந்து தொடர்பான பொறுப்பதிகாரியான பொலிஸ் சாஜன் கோகுலனுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் திருகோணமலை சேருநுவர பகுதியில் தலைமறைவாகியிருந்த குறித்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்தவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தியபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை அவருக்கு எதிராக 26 வழக்குகள் உள்ளதாகவும் ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு அவருக்கு பிணைக்கு கையெழுத்திட்டவர்கள் தற்போது அதில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்ட அவதூறு; யாழில் 17 வயது மாணவி தற்கொலை

வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்ட அவதூறு; யாழில் 17 வயது மாணவி தற்கொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு