Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: சந்தேகநபர்களான மகளுக்கும் மருமகனுக்கும் விளக்கமறியல்

யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: சந்தேகநபர்களான மகளுக்கும் மருமகனுக்கும் விளக்கமறியல்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் விரிவுரையாளர் திலீபன் தயாளினி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் 19 வயதுடைய மகளும், 21 வயதுடைய மருமகனும் நகர்த்தல் பத்திரம் மூலம் யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். பிரணவன் மேற்கொண்ட உடற்கூற்று பரிசோதனையில், விரிவுரையாளர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அவரது உடல் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப ஆதாரங்களான ஏ.டி.எம் பரிவர்த்தனைகள், எரிபொருள் நிரப்பு நிலைய ‘QR’ தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அதேசமயம் இந்தவழக்கில் சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சுமந்திரன் ஆஜரானதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வந்த நிலையில் சுமந்திரன் கீழ் கண்டவாறு முகப்புத்தகத்தில் ஒருபதிவைவிட்டுள்ளார்.

”தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்!
பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரிற்காகவே திரு சுமந்திரன் அவர்கள் நீதிமன்றில் முன்னிலையானார்.

மேலும், தவறான செய்திகளைப் பரப்புவர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
மட்டக்களப்பில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்-தாலி விற்ற பணத்தில் கார்; இதுவரை 5பேர் கைது

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்-தாலி விற்ற பணத்தில் கார்; இதுவரை 5பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு