Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்-தாலி விற்ற பணத்தில் கார்; இதுவரை 5பேர் கைது

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்-தாலி விற்ற பணத்தில் கார்; இதுவரை 5பேர் கைது

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கர வண்டிகள்,கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மூன்று வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதியில் அழுது கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணையினை முன்னெடுத்துவந்தனர்.

குறித்த சம்பம் தொடர்பில் சிசிரிவி காட்சிகளைக்கொண்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளப்படுத்தப்பட்டு அதன் உரிமையாளர் இனங்காணப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா வேர்க்கண்டசேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவன் மனைவி,கணவனின் சகோதரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கணவன் மனைவி, சம்பவ தினமான வியாழக்கிழமை வவுணதீவு பகுதியில் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி எங்கே போவதாகக் கேட்டுள்ளனர். அவர் மட்டக்களப்பு நகருக்குப் போகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண் தாங்களும் அங்கு செல்வதாகக் கூறி வருமாறு அழைத்துள்ளார். இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கிப் பயணித்துள்ளனர். அப்போது தான் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் தெரிவித்துக் கொண்டே நகரை வந்தடைந்து குழந்தையுடன் இளம் தாய் இறங்கியுள்ளார்.

இறங்கிய அந்த இளம் தாய்க்குப் பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாகத் தெரிவித்துப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு அவர் அடகு வைத்த தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துக் கொண்ட பின்னர், குறித்த பெண் தாங்கள் மீண்டும் வவுணதீவு செல்வதாகவும், உங்களுடன் இன்னொருவரை ஏற்றி குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் தெரிவித்து அவர்களை மீண்டும் ஆட்டோவில் ஏற்றியுள்ளார். வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் குடிப்பதற்கு கொடுத்துள்ளனர். அவர் அதனை வாங்கி குடித்ததையடுத்து மயக்கமடைய ஆரம்பித்துள்ளார்.

இதன்போது கொத்தியாபுலை பகுதியில் உள்ள வயல்பகுதியில் குழந்தையினை வீசிவிட்டு குறித்த முச்சரக்கவண்டி காஞ்சிரங்குடா சென்று அங்கு மயக்கமடைந்த பெண்ணின் சுமார் நான்கரை பவுன் தாலிக்கொடியை கழட்டி தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு மனைவியை வீட்டில் இறக்கிவிட்டபின்னர் வீட்டிலிருந்த தனது காரில் குறித்த பெண்ணை ஏற்றிக்கொண்டு தனது சகோதரனை கூட்டிக்கொண்டுசென்று நெல்லிக்காட்டு பகுதிக்கு கொண்டுசென்று கிணற்றில் பெண்ணை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதேபோன்று கடந்த 28ஆம் திகதி களுவாஞ்சிகுடியிலிருந்து பட்டிருப்பு பாலம் ஊடாக முச்சக்கர வண்டியொன்றில் கணவன் மனைவியும் வந்துகொண்டிருந்தபோது பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் பஸ்ஸுக்காக காத்திரந்து திக்கோடை,4 0ஆம் கிராமத்தினை சேர்ந்த 45வயதுடைய ரவி நளாயினி என்பவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டுவந்துகொண்டிருக்கும்போது அவருக்கும் குளிர்பாணத்தில் மயக்க மருந்து வழங்கப்பட்டு அவரை காஞ்சிரங்குடா பகுதிக்கு கொண்டுவந்து அவரது சுமார் 07பவுண் கொடியை கழட்டு எடுத்துவிட்டு குறித்த நெல்லிக்காட்டு கிணற்றில் வீசிவிட்டுச்சென்றுள்ளனர்.

இந்த பெண்ணிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடியை விற்பனை செய்து அதன்மூலம் கார்ஒன்றிணை கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமட்டுமன்றி மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த பெண்னொருவருடன் உரையாடிக்கொண்டு அவருக்கு மயக்க மருந்துகொண்டு கடந்த பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி அவரிடமிருந்த தங்கநகைகளையும் மோட்டார் சைக்கிளில்வந்து கொள்ளையிட்டுச்சென்றுள்ளமை தொடர்பிலும் இதன்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள், மட்டக்களப்பில் ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் இறுதியாக கடத்தப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி என்பனவற்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது கொள்ளையிடப்பட்ட நகைகள் விற்பனைசெய்த மற்றும் அடகுவைக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் நாளையதினம் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
Next Post
”இலக்கு வைக்கப்படக்கூடும்”; உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

''இலக்கு வைக்கப்படக்கூடும்''; உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.