Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பை அதிரவைத்த கொ.லை கொ.ள்ளை சம்பவம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பை அதிரவைத்த கொ.லை கொ.ள்ளை சம்பவம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் (23) நீதிபதியின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நான்கு தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைசெய்வதற்கான அனுமதியை வழங்கியதுடன், அவர்களிடம் நகைகளை கொள்வனவுசெய்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை வவுணதீவு பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நெல்லியடி வயல் பிரதேச கிணற்றினுள் வீசப்பட்டார்.

அதுமட்டுமல்லாது ஏற்கனவே இவ்வாறாக இடம்பெற்ற சம்பவமொன்றில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலமொன்றும் குறித்த கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் முன்னெடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் மூலம் பிரதான சந்தேகநபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பொலிசாரினால் முன்நிலைப்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்த முடியாமையினால் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீதவான் அண்ணாத்துறை தர்சினி முன்நிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது பொலிசாரினால் சந்தேகநபர்களை 04 நாட்களுக்கு மேலும் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான மனு நீதிபதியிடம் சமர்ப்பித்ததையடுத்து பிரதான சந்தேகநபர்கள் மூவரையும் 04 நாட்களுக்கு பொலிசார் தடுத்து வைத்து விசாரிப்பதற்கும், ஏனைய இருவரையும் எதிர்வரும் 2026.03.27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதியினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 2026.03.27ம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
Next Post
நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கிறது

நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு