கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (24) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இந்த சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.








