Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் விபத்தில் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் விபத்தில் உயிரிழப்பு

6 months ago
in உலக செய்திகள், செய்திகள்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் (Aargau) மாநிலத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – நவாலியைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்ணின் 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அவரது குடும்பத்தினர் கடந்த வாரம் துருக்கிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்புவதற்காக இஸ்தான்புல் விமான நிலையத்துக்கு வாடகை வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பெண் , அவரது மகன் (28) ஆகியோருடன் 47 வயதான மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் பயணித்த சிற்றூந்து விபத்தில் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அதிவேகம் அல்லது கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்து துருக்கி காவல்துறை மற்றும் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
உயர்தரப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

உயர்தரப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு