பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக எரிபொருள் பவுஸர் ஒன்றை
மறைத்து வைத்திருந்த கோனபொல பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வலான ஊழல் ஒழிப்பு
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், மொராகஹஹேன பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் ஆவார்.
சந்தேக நபர் பதுக்கி வைத்திருந்த 6752 லிட்டர் டீசல் மற்றும் 120 லிட்டர் பெட்ரோலை பொலிஸார்
பறிமுதல் செய்துள்ளனர்.
வலான ஊழல் ஒழிப்பு செயணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகள்
நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.








