ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்தை மேற்கொள்ளும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டங்களை இயற்ற ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் சட்டத்துறையினால் அது இறுதி செய்யப்படும் என ஈரான் பாராளுமன்ற சிவில் விவகாரக் குழுத் தலைவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஈரான் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் ஏனைய போக்குவரத்து வழிகளைப் போலவே ஒரு நாட்டின் ஊடாகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது வரி செலுத்தப்படுகிறது.

அதேபோல் ஹோர்முஸ் நீரிணையும் ஒரு வழிப்பாதையே. அதன் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த கப்பல்களும் எண்ணெய் தாங்கிகளும் அதற்குக் கட்டணம் செலுத்துவது இயல்பானது” அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனவே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் முன்வைத்துள்ள ஐந்து நிபந்தனைகளில், ஹோர்முஸ் நீரிணை மீது தனது அதிகாரத்தைச் செலுத்துவதற்கான உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.








