எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, இலங்கையில் இயங்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனம் தனது வருடாந்த லாபத்தை வெறும் மூன்று வாரங்களுக்குள் ஈட்டியுள்ளதாக பேராசிரியர் பிரசன்ன பெரேரா வெளிப்படுத்தியுள்ளார்.
ஏரி சக்தித் துறைக்கு பின்னால் உள்ள பலமான அரசியல் மற்றும் பொருளாதார செயல்முறைகள் காரணமாக மக்கள் பாதிக்கப்படும் போது, சில தரப்பினர் இவ்வாறு பாரிய நன்மைகளை அடைந்து கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார். ஹிரு தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் சிலவற்றை சுட்டிக்காட்டுகையில்,
இந்த விலை அதிகரிப்பு மூலம் எண்ணெய் நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் மிக அதிக இலாபத்தைப் பெறுகின்றனர், எரிபொருள் விலை உயர்வால் வரி வருமானம் அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) சாதகமான நிலை ஏற்படுவதுடன், சில நிறுவன ஊழியர்களுக்கு ‘போனஸ்’ கூட வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி தனது பணவீக்க இலக்குகளை அடைய முயற்சி செய்தாலும், அதன் உண்மையான சுமையை சாதாரண மக்களே அனுபவிக்கின்றனர்.
டீசல் விலை அதிகரிப்புடன் உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்கின்றன. இது தம்புள்ளை மரக்கறி சந்தை முதல் அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக் காரணமாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.








