Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரெலோ தலைமைக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

ரெலோ தலைமைக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

4 months ago
in அரசியல், செய்திகள்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) கட்சியின் தற்போதைய தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும், உடனடியாக தேசிய மாநாட்டை நடத்தக்கோரியும் திருகோணமலை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள வெலிக்கடைத் தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் இன்று (27) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கட்சியின் விதிகளின்படி, தற்போதைய தலைமை மற்றும் குழுவினரின் பதவிக்காலம் கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேசிய மாநாட்டைத் திட்டமிட்டுத் தள்ளிப்போடுவதன் மூலம், உட்கட்சி ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.​

12வது தேசிய மாநாட்டிற்காக 8 மாவட்டங்களில் இருந்தும் புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு திருகோணமலையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் தலைமையே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக உறுப்பினர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.​

ஆயுதப் போராட்ட இயக்கமாகத் தொடங்கி, இன்று ஒரு முதன்மையான அரசியல் கட்சியாக இருக்கும் ரெலோ, சமீபகாலமாகத் தேர்தல் மற்றும் நிர்வாக ரீதியாகப் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

தங்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் “சர்வாதிகாரப் போக்குக்கு” எதிராக இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாக உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரத்தம் சிந்தி, ஆயுதம் ஏந்திப் போராடியது நீதிமன்றப் படிகளில் ஏறுவதற்காக அல்ல” எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், ஜனநாயகத்தை மதித்து புதிய தேர்வுகளை நடத்தி, உடனடியாக 12வது தேசிய மாநாட்டை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.​

அத்துடன் மேற்குறித்த விடயங்களை உள்ளடக்கி ரெலோ கட்சியின் திருகோணமலை மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களால் ஒருமித்த கருத்துடன் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
சேவை நேரத்தில் காணாமல்ப்போன இளவாலை வைத்தியர்; மயக்கமுற்றநிலையில் மாணவன் வெளியில்

சேவை நேரத்தில் காணாமல்ப்போன இளவாலை வைத்தியர்; மயக்கமுற்றநிலையில் மாணவன் வெளியில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு