கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ முதன்முறையாக நேற்று (26) வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்னை சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன்போது பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்கிற்கு ரைபிள் துப்பாக்கியொன்றை பரிசளித்துள்ளார்.
மேலும் எதிரிகள் தென்பட்டால் இது உங்களுக்குப் பயன்படும் எனவும் பெலாரஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.








