மன்னாரில் நேற்று (29) விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள் போத்தலிலேயே மேற்படி இறந்த பல்லியின் உடன் முழுவதுமாக கிடந்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது
மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இயற்கையான கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பலர் அவற்றை கொள்வனவு செய்யாது போத்தல்களில் அடைக்கப்பட்ட கள்ளை கொள்வனவு செய்து அருந்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








