ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட விலகியுள்ளார்.
திறைசேரி செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. டிமல் அரந்தர இந்த இரு நிறுவனங்களினதும் பதில் தலைவராகச் செயற்படுவார்.
தலைவர் சரத் கணேகொடவுடன் இணைந்து, நிறுவனத்தின் பணிப்பாளர் ரோஹன் குணதிலக்கவும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கன் கேட்டரிங் ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளிலிருந்தும் விலகியுள்ளார்.








