Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியா வரவிருந்த ஈரான் மனிதாபிமான விமானம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்!

இந்தியா வரவிருந்த ஈரான் மனிதாபிமான விமானம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்!

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானிலிருந்து மருத்துவ உதவிகள் பெற இந்தியா வரவிருந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் மூலம் அமெரிக்கா தாக்கியுள்ளது.

ஈரானில் உள்ள மஷ்ஹத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ‘மஹான் எயார்’ எனும் விமானம் மனிதாபிமானப் பணிகளுக்காக மருத்துவ உதவிகளைப் பெற இந்தியா வரவிருந்தது. இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

ஈரான் விமானப் போக்குவரத்துத் துறை இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதனைப் போர்க்குற்றம் என்றும் சர்வதேச சட்டங்களை மீறியதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. பல நாடுகளிடமிருந்து மனிதாபிமான முயற்சியின் ஒரு பகுதியாக மருத்துவ உபகரணங்களைக் கொண்டுவர அந்த விமானம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மனிதாபிமான உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானத்தைத் தாக்குவது, சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் மனித உரிமை தொடர்பான சட்டங்களின்படி தவறாகும். சிகாகோ உடன்படிக்கை (1944), மாண்ட்ரியல் உடன்படிக்கை (1971), பயணிகள் விமானங்களின் மீதான தாக்குதல்களைத் தடைசெய்து அதனைப் போர்க்குற்றமாக அறிவிக்கும் ஜெனிவா உடன்படிக்கை பிரிவு (52) ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஈரான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக சுதந்திரமான விசாரணையைத் தொடங்கவும், சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்பேற்கச் செய்து, இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து சிவில் விமானப் போக்குவரத்தைப் பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஈரான் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சர்வதேச அமைப்புகளை வலியுறுத்தியுள்ளது.

தாக்குதலுக்குள்ளான விமானம் நாளை (01) மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருள்களை ஏற்றிச்செல்ல இந்தியா வரவிருந்தது. முன்னதாக, கடந்த மார்ச் 18 அன்று ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மருத்துவ உதவிகளை முதல்முறையாக இந்தியா அனுப்பி வைத்தது. தில்லியில் உள்ள ஈரான் தூதரகம் அதற்கு நன்றி தெரிவித்திருந்தது.

ஈரானின் தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான ‘மஹான் ஏர்’ நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா தடை விதித்திருந்தது.

இந்த விமான நிறுவனத்திற்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், உள்நாட்டு மோதல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆயுதங்களை இந்நிறுவனம் கொண்டு செல்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!

July 30, 2026
உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

July 30, 2026
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை
செய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

July 30, 2026
தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
Next Post
புளோரிடா விமான நிலையத்திற்கு ட்ரம்பின் பெயர்; ஆளுநர் ரான் டிசேன்டிஸ் அதிரடி ஒப்புதல்!

புளோரிடா விமான நிலையத்திற்கு ட்ரம்பின் பெயர்; ஆளுநர் ரான் டிசேன்டிஸ் அதிரடி ஒப்புதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு