கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கள்ளச்சாராயம் தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவிக் கொட்டுக்கு உள்ளாகிய சம்பவமொன்று இன்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ரம்பொட வெதமுல்ல தோட்டப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்து வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அங்கு சென்றபோதே திடீரென குளவி கொட்டுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட அதிகாரிகளில் 2 பேர் கொத்மலை வைத்தியசாலையிலும் மேலும் ஆபத்தான நிலையிலுள்ள 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் 03 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.








