Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர்தர உயிரியல்துறையில் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அனுஸ்ராமும் கணித பிரிவில் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ஹரிமீனுஜனும் மாவட்டத்தில் முதல் இடம்

உயர்தர உயிரியல்துறையில் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அனுஸ்ராமும் கணித பிரிவில் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ஹரிமீனுஜனும் மாவட்டத்தில் முதல் இடம்

5 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நேற்று (02) வெளியாகிய கா.பொ.த.உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

இதன்கீழ் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ்மேவின் ஹரிமீனுஜன் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 62வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கல்லடி உப்போடையினை சேர்ந்த பிலிப் ரைற்றஸ்மேவின், சுகந்தி தம்பதிகளின் புதல்வனாவார்.

இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் உயிரியல்துறையில் கல்வி பயிலும் நாவற்குடாவினை சேர்ந்த யூட்நிமால் அனுஸ்ராம் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்புமாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 42வது இடத்தினையும் பெற்று மருத்துவதுறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றும் யூட்நிமால் -விஜயமோகனா தம்பதிகளின் புதல்வனாவார்.

இதேநேரம் இருவருரின் வீடுகளுக்கும் நேற்று மாலைவ விஜயம் செய்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் இருவரையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்படுமானால் உதவுவதற்கு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
“கம்மன்பிலவின் நூல் ஒரு திட்டமிட்ட நாடகம்”; பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடும் சாடல்!

"கம்மன்பிலவின் நூல் ஒரு திட்டமிட்ட நாடகம்"; பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடும் சாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு