Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரணத்தை வென்று உயிர்த்தார் இயேசு பிரான்; உலகெங்கும் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழா கோலாகலம்!

மரணத்தை வென்று உயிர்த்தார் இயேசு பிரான்; உலகெங்கும் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழா கோலாகலம்!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும் (05).

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

இயேசு கிறிஸ்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்து, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததையே கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.

இயேசுவின் துன்பப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த 40 நாட்கள் தவக்காலமும் இன்றைய உயிர்த்த ஞாயிறு தினத்துடன் நிறைவடைகிறது.

இஸ்ரேலின் எருசலேம் நகரில் உள்ள கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட அவர், இன்றைய தினத்தில் உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்குக் காட்சியளித்ததாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய உயிர்த்த ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு, “அல்லேலூயா” சனிக்கிழமை நள்ளிரவு ஆராதனைகள் நேற்று இரவு அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்றன. கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்து கொண்ட விசேட ஆராதனை கொட்டாஞ்சேனை புனித லூசியா கதீட்ரலில் நடைபெற்றது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெறும் திருப்பலிகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசந்த பெர்னாண்டோ, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக கிறிஸ்தவ மக்கள் எவ்வித தேவையற்ற அச்சமுமின்றி தமது மத வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என அருட்தந்தை ஜூட் கிரிசந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!
செய்திகள்

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

September 17, 2026
பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

September 17, 2026
மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!
செய்திகள்

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

September 17, 2026
Next Post
மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்திபூர்வமாக நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனை!

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்திபூர்வமாக நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு