கொழும்பு மத்திய பிரதான பேருந்து நிலையத்தை ஜனாதிபதி முழுமையாக ஒன்றும் புனரமைக்கவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு.
கொழும்பு மத்திய பிரதான பேருந்து நிலையம் முழுமையாக புனரமைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பழைய கட்டிடத்திற்கு வெறும் வர்ணம் பூசப்பட்டதையே அபிவிருத்தியாக காட்டியுள்ளதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த அரச தரப்பு, இதற்கு முன்பே தாங்கள் பெரிய அளவிலான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டதாகவும், எதிர்காலத்திலும் மேலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.








