மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டனர்.
மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.








