மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் அதிசொகுசு பஸ் வண்டி, வெலிக்கந்தை பகுதியில் நேற்று (11.04.2026) நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் மோதி கடுமையான விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொருவர் கடுமையான காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து அந்தப் பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








