கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் மிலாட் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிலாட் நகரில் காணப்படும் ஹென்றி எனும் லபெரியர் கோட்டையில் வார இறுதியை முன்னிட்டு நேற்று திருவிழா நடைபெற்றுள்ளது.
இதில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அங்கு திடீரென கனமழை பெய்ததினால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடியுள்ளனர்.
அப்போது மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 70இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.








