அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் விடுத்த கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளித்து கத்தோலிக்க மதத் தலைவர் போப் லியோ அமைதி மற்றும் மனிதாபிமானத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஆப்பிரிக்க பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிரம்புடன் விவாதத்தில் ஈடுபட விருப்பமில்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில், உலகில் நடக்கும் போர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை மூலமே தீர்வு கிடைக்கும் என்றும் கூறினார்.
மேலும், கிறிஸ்தவ மதத்தின் உண்மையான போதனைகள் சிலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என மறைமுகமாக விமர்சித்தார். போரால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்க, மாற்று அமைதியான வழிகளை உலகிற்கு முன்வைப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், வாடிகன் தனது அமைதி நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அரசியல் அதிகாரத்துக்கும் மதத்தலைவர்களின் அறக் குரலுக்கும் இடையிலான இந்த நிலைமை உலக கவனத்தை ஈர்த்துள்ளது.








