ஹந்தான வனப்பகுதியில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்ட போது தொலைந்த நபரை இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இலங்கை சிங்க படையணியின் வீரர்கள் இரு குழுவாக பிரிந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில் மாலை 6.40 மணியளவில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இரவு முழுவதும் தேடுதல் பணி தொடர்ந்த நிலையில் காணாமல் போயிருந்த நபர் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டார்.
அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்ப்பட்டிருக்கவில்லையென இராணுவத்தினர் தெரிவித்தனர்.








