Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் வாங்க மனைவியை விற்பனை செய்த கணவன்; ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி

போதைப்பொருள் வாங்க மனைவியை விற்பனை செய்த கணவன்; ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி

5 months ago
in செய்திகள்

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தேடும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மற்றொருவரையும் கைது செய்வதற்கு அலவதுகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முப்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கண்டி ஏரியில் குதித்துள்ளார்.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் அவர் காப்பாற்றப்பட்டு, அகுரண பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வைத்தியர்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின்படி, போதைப்பிற்கு அடிமையான அவரது கணவர், சில வருடங்களுக்கு முன்னர் தனது சிறுநீரகத்தை 11 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து அந்தப் பணத்தையும் போதைப்பொருள் பாவனைக்கே செலவிட்டுள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத நிலையில், அண்டை வீட்டாருடன் உடலுறவில் ஈடுபடுமாறு கணவர் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நபர் தனது கை, கால்களைக் கட்டி வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாகவே தான் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மூன்று பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் அகுரண பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவதுகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
ஏறாவூர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய ஓட்டமாவடி நபர்

ஏறாவூர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய ஓட்டமாவடி நபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு