Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திறைசேரிப் பணம் மாயமானதன் பின்னனியில் ஹேக்கர்கள்; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறுகிறார்

திறைசேரிப் பணம் மாயமானதன் பின்னனியில் ஹேக்கர்கள்; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறுகிறார்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு தவணை கட்டணங்களைச் செலுத்தும் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடி சம்பவம், ஒருங்கிணைந்த சைபர் தாக்குதலின் விளைவாகும் என நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் Export Finance Australia நிறுவனத்துடன் நடைபெற்ற மின்னஞ்சல் தொடர்புகள் ஹேக்கர்களால் உடைக்கப்பட்டதால், செலுத்தப்பட வேண்டிய நிதி வஞ்சகமான முறையில் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும், எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவிற்கு அனுப்பப்படவிருந்த மற்றொரு கொடுப்பனவிலும் இதேபோன்ற முயற்சி கண்டறியப்பட்டதன் பின்னர் சந்தேகம் எழுந்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுகுறித்து திறைசேரி உடனடியாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு, CID மற்றும் இலங்கை CERT ஆகியவற்றிற்கு தகவல் வழங்கியதுடன், உள்வாரி விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஹேக்கர்களை கைது செய்து இழந்த நிதியை மீட்டெடுப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும், விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் நிலவும் முறைகேடுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஆதரவை அவுஸ்திரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!

September 18, 2026
சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரி பாராளுமன்ற உறுப்பினர் சனகியன்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரி பாராளுமன்ற உறுப்பினர் சனகியன்!

September 18, 2026
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!
செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

September 18, 2026
பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
Next Post
கந்தளாயில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

கந்தளாயில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு